ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ‘சைரன்’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்த இந்த படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி 2 மாதங்களுக்குப் பிறகு, ‘சைரன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஓடிடி ரிலீஸ் ஆக உள்ளது.
முன்னதாக ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தை தவறவிட்ட ரசிகர்கள் இனி ஓடிடியில் ரசிக்கலாம்.
