முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதற்காக பலர் பல்வேறு வைத்திய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். ரசாயனங்கள் நிறைந்த மருந்துப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் சுருக்கங்கள் வேகமாக மறையலாம், ஆனால் அதற்கு பதிலாக பல பின்விளைவுகளும் ஏற்படலாம்.
இந்த கட்டுரையில், வெறும் இரண்டு பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேன்
விட்டமின் ஈ கேப்சியூல்
செய்முறை:
ஒரு சிறிய பவுலில் சிறிதளவு தேன் சேர்க்கவும்.
விட்டமின் ஈ கேப்சியூலில் உள்ள எண்ணெயை மட்டும் சேர்க்கவும்.
இரண்டையும் நன்கு கலக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தேய்த்து 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவு மட்டுமில்லாமல் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், வழக்கங்கள் ஆகியவையும் மறையும்.
குறிப்பு:
இதை இரவில் தூங்க செல்லும் முன்பு பயன்படுத்த வேண்டும்.
தேன் முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.
தேனில் உள்ள ஆன்டிபாக்டீரியல் சத்துக்கள் தழும்புகள் மற்றும் பருக்களை நீக்க உதவும்.
இந்த எளிய முறையை பின்பற்றி முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்யுங்கள்!
