Tuesday, February 24, 2026

“கோட்” படத்தை பற்றி முக்கிய தகவலை கூறிய ஒய்.ஜி. மகேந்திரன் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெளியான “விசில் போடு” பாடல் விமர்சனங்களை சந்தித்தது. இது குறித்து கவிஞர் மதன் கார்க்கி, “அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய பாடலாகவே ‘விசில் போடு’ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள், கூகுள், செல்ஃபி புள்ள பாடல்கள் எப்படி ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டதோ அதே போல இந்த பாடலும் ரசிகர்களை நிச்சயம் கவரும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த படத்தில் நடித்த ஒய்.ஜி. மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சிபிஐ அதிகாரிகள்: “நான் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் சிபிஐ அதிகாரிகள். ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு கேட்டுக் கொண்டார். விஜய்யுடன் காம்பினேஷன் காட்சி தான் எனக்கு இருக்கிறது.”
துப்பாக்கி போல: “இந்த படம் வழக்கமான ஆக்ஷன் திரைப்படமாக இல்லாமல் ‘துப்பாக்கி’ படத்தை போல தரமான ஆக்ஷன் படமாக இருக்கும். அந்த படத்தின் செட்டுக்குள் சென்ற போதே நல்ல கிளாஸான படத்தில் நடிக்க வந்திருக்கிறோம் என்று புரிந்துக் கொண்டேன். ‘துப்பாக்கி’ படத்தை விட ‘கோட்’ படம் தரமாக இருந்தால் தாறுமாறு ஹிட்டு தான்” என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.
தமிழ்நாடே அதிரும்: “இந்த படத்தில் நான் ஒரு வசனம் பேசியிருக்கிறேன். அது எந்தவொரு கட்டும் இல்லாமல் வந்தால், நிச்சயம் தமிழ்நாடே அதிரும். அவ்வளவு முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் வெங்கட் பிரபு கையாண்டிருக்கிறார்” என்று படத்தின் கதைக்களத்தை பற்றியும் ஒய்.ஜி. மகேந்திரன் பேசியுள்ளார்.
“தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT