Tuesday, February 24, 2026

எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம்.எஸ்.பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் “அக்கரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது:

ADVERTISEMENT

படத்தைத் தயாரித்த கார்த்திகேயனுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது.
சண்டைக் காட்சிகளை இயக்குநர் சரவெடி சரவணன் அற்புதமாக படமாக்கியுள்ளார்.
இந்தக் கதையை என் அக்கா மகன் மது தான் எனக்கு சொன்னார்.
முதலில் வேறு ஹீரோ நடிக்கலாமா என்று கேட்டேன், ஆனால் இயக்குநர் என்னை தான் நடிக்க வைத்தார்.
மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன். வெண்பாவும், பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளனர்.
ஷூட்டிங் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசியதாவது:

நான் சினிமாவுக்கு புதிது. நண்பர்கள் மூலம் தான் இந்த கதை வந்தது.
“குன்றம் புரடக்சன்ஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
ஷிவானி பிலிம்ஸ் சார்பில் செந்தில் பேசியதாவது:

“அக்கரன்” ஒரு நல்ல படம். அதை ஷிவானி சினிமாஸ் சார்பில் வெளியிடுவது மகிழ்ச்சி.
இயக்குநர் அருண் K பிரசாத் பேசியதாவது:

நண்பர் கருப்பசாமி மூலமாகத் தான் எம்.எஸ்.பாஸ்கரைத் தெரியும். அவருடைய நடிப்பில் படம் புதுமையாக இருக்கும்.
கேமராமேன் ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
இவ்விழாவில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. பட டிரெய்லரும் திரையிடப்பட்டது.

“அக்கரன்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT