மலையாள சினிமாவின் மைல்கல்!
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஆடு ஜீவிதம்” நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாகி, 25 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பிருத்விராஜ் நாயகனாகவும், அமலா பால் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தை பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பத்தாண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம், கடந்த மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும், படத்தின் தயாரிப்பும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.16 கோடி வசூலித்த இப்படம், தற்போது 25 நாட்களில் ரூ.150 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்திற்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஆடு ஜீவிதம்” படத்தின் வெற்றிக்கு படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
