Wednesday, October 28, 2026

நடிகை அம்பிகாவுக்கு இண்டிகோ விமானத்தில் விபரீத அனுபவம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்த நடிகை அம்பிகாவுக்கு விமானத்தில் விபரீத அனுபவம் ஏற்பட்டுள்ளது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ள அம்பிகா, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சீட் பெல்ட் பாதி மட்டுமே இருந்ததாகவும், இதுகுறித்து விமானப் பணியாளரிடம் தெரிவித்தபோது அவர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் “நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள்” என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

விமானம் திடீரென அவசரமாக தரையிறங்க நேரிட்டால் சீட் பெல்ட் இல்லாமல் கீழே விழ நேரிடும் என்பதால், வேறு இருக்கைக்கு மாற்றி தருமாறு அம்பிகா கேட்டபோது, “ஏதாவது இருக்கை காலியாக இருந்தால் சொல்லுங்கள்” என்று பணியாளர் கூறியதாகவும், பின்னர் ஒரு காலி இருக்கையை கண்டுபிடித்து அம்பிகா அங்கு சென்றதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும், இண்டிகோ விமானத்தின் பராமரிப்பு சரியில்லை என்றும், பணியாளர்களின் எதைப்பற்றியும் கவலைப்படாத மனநிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அம்பிகா தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT