Tuesday, February 24, 2026

விராட் கோலிக்கு 50% அபராதம்: நோ-பால் விவகாரத்தில் நடுவர்களுடன் வாக்குவாதம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

ஐபிஎல் 2024 தொடரில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியில், நோ-பால் முடிவை எதிர்த்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ராணா வீசிய ஒரு பந்தை, விராட் கோலி கிரீஸுக்கு வெளியே நின்று தடுத்தாட முயன்றார். இதையடுத்து, மூன்றாவது நடுவர் மைக்கேல் காஃப், அவுட் என்று தீர்ப்பளித்தார்.

ADVERTISEMENT

இந்த முடிவை ஏற்க மறுத்த கோலி, நடுவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

பிசிசிஐ அறிவிப்பு:

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 21ம் தேதி (2024) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான டாடா ஐபிஎல் 2024-ன் 36வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டர் விராட் கோலி, நடுவர்களின் தீர்ப்பிற்கு எதிராக வாக்குவதாத்தில் ஈடுபட்டு ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார். நடுவரின் தீர்ப்பே இறுதியானது எனபது ஐபில் லெவல் 1 விதிமுறையாகும். இதை அவர் மீறியுள்ளார். இதற்காக விராட் கோலிக்கு அன்றைப் போட்டியின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 50% அபராதமாக பிடித்தம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், ஐபிஎல் வரலாற்றில் அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT