கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, விஜய், த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலிஸ் ஆனது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்தப்படம், மூன்று நாட்களில் 15 கோடி வரை வசூல் செய்து, ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
ரத்னம் விஜய்யை சந்தித்து வாழ்த்து:
இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ரத்னமும், விநியோகஸ்தரும், விஜயை நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.
விஜய் காயம் புகைப்படங்கள் வைரல்:
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் விஜய் கையில் காயம் இருந்தது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, படத்திற்காக விஜய் இப்போதும் இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்பதை குறிக்கும் வகையில், அவரது ரசிகர்கள், அதனை சமூகவலைதளங்களில் ஷேர் செய்திருந்தனர்.
பெரும்பான்மையானோர், அவருக்கு வலது கையில் மட்டும் அடிபட்டு இருந்தது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்திருந்த நிலையில், இன்னும் சில ரசிகர்கள், அவரது முகம் மற்றும் இடது கையில் காயம் இருந்தது தொடர்பான புகைப்படங்களை ஜூம் செய்து பதிவிட்டு இருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ பட அப்டேட்:
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.
படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.
புதியகீதைக்கு பின்னதாக, கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது.
தற்போது படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்று இருக்கிறது.
விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்து:
முன்னதாக, படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்த விஜய்க்கு அங்கிருந்த ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்தனர்.
அங்கு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய அவர், “உங்கள் வீட்டு பிள்ளையாக நீங்கள் என்னை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் மனசுல அப்படியே வாழ்ந்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
Vijay effort for #TheGreatestOfAllTime 🥺 pic.twitter.com/NicqU6Bbrb
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) April 24, 2024
