Friday, December 1, 2023

ஆதி நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த புகைப்படங்கள்

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஈரம்,அரவான்,மரகத நாணயம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஆதி.ஹீரோவாக மட்டுமல்லாமல் முக்கிய வேடம்,வில்லன் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ஆதி.

டார்லிங் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி கலகலப்பு 2,மொட்டை சிவா கெட்ட சிவா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி,தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து பிரபலமானவராக இருந்தார் நிக்கி கல்ராணி.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.இதனை தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் காலப்போக்கில் காதலர்களாக மாறினார்கள்.

இருவரும் தங்கள் வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவெடுத்துள்ளனர்.இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.இதுகுறித்த சில புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.விரைவில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இருவருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles