Tuesday, February 24, 2026

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சர்பிரைஸ் கிபிட் கொடுத்து அசத்திய அஜித் ! வைரலாகும் தகவல் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் குமாரின் ஏ.கே. 63 படத்தை ஆத்விக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை எல்ட்ரெட் குமார் தயாரிக்கிறாராம். ஆத்விக் இயக்கத்தில் நடிக்க அஜித் குமாருக்கு ரூ. 175 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது தான் அஜித் கெரியரில் அதிகமான சம்பளமாகும்.

ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் ஆதிக்கை பாராட்டி வருகிறார்கள். ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்த கையோடு தனக்கு பிடித்த நடிகரான அஜித் குமாரை வைத்து படம் இயக்கப் போகிறாராம்.

மார்க் ஆண்டனி படத்திலேயே அஜித் ரெஃபரன்ஸ் வைத்திருந்தார் ஆதிக். அதை பார்த்த ஏ.கே. ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஹீரோ தவிர்த்து மார்க் ஆண்டனி படத்தின் ஹைலைட் என்றால் அது எஸ்.ஜே. சூர்யா தான்.

படத்தின் இரண்டாம் பாதி எஸ்.ஜே. சூர்யாவுடையது என விமர்சனம் எழுந்தது. அவரை வில்லனாக நடிக்க வைக்குமாறு ஆதிக் ரவிச்சந்திரனிடம் பரிந்துரை செய்ததே அஜித் குமார் தானாம்.

மார்க் ஆண்டனி பற்றி அஜித் போட்ட கணக்கு ஒர்க்அவுட் ஆகிவிட்டது. மார்க் ஆண்டனிக்கு அஜித் குமார் ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் ரசிகர்களும் ஆதரவு அளித்தார்கள்.

மார்க் ஆண்டனி பட ட்ரெய்லரை வெளியிட்டு வாழ்த்தினார் விஜய். இதையடுத்து படத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். அது தான் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அஜித் குமாரின் தீவிர ரசிகன் ஆதிக் ரவிச்சந்திரன். அதனால் படத்தை பார்த்து பார்த்து எடுப்பார். லோகேஷ் கனகராஜ் எப்படி தனக்கு பிடித்த கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை பார்த்து பார்த்து எடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தாரோ அதே போன்று தான் ஆதிக்கும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த காரணத்திற்காகவே ஏ.கே. 63 படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக ஏ.கே. 63 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கும் என பேச்சு கிளம்பியது. அவர் அஜித் குமாரை சந்தித்து பேசிய பிறகே அப்படி பேசினார்கள்.

படத்தின் கதை என்னவாக இருக்கும்?

படத்தின் கதை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாருக்கு சொன்ன கதை மிகவும் நன்றாக இருந்ததாகவும், அஜித் அதை மிகவும் ரசித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்த கதை ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி என்ன?

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், 2024 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் திருமண நாள் பரிசாக அஜித் அவர்கள் எனது அடுத்த படம் உனக்கு தான் இது தான் என் திருமண நாள் பரிசு என ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவியிடம் அஜித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் என இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT