பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம், வெளியாகி ஒரு வாரத்தைத் தொட்ட நிலையில், அதன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் சற்று சரிந்துள்ளது.
Sacnilk.com இணையதள அறிக்கையின்படி, ஏப்ரல் மூன்றாம் தேதி, இந்தியாவில் சுமார் 3.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது இப்படத்தின் இதுவரை இல்லாத அளவில் மிகக் குறைந்த வசூல் ஆகும்.
மார்ச் 28ம் தேதி வெளியான இப்படம், அதன் தொடக்க வாரத்தில் இந்தியாவில் சுமார் ரூ.43.85 கோடி நிகர வசூலித்தது.
முதல் நாளில் ரூ.7.6 கோடி, இரண்டாவது நாளில் ரூ.6.25 கோடி, மூன்றாவது நாளில் ரூ.7.75 கோடி, நான்காவது நாளில் ரூ.8.7 கோடி வசூலித்தது.
ஐந்தாவது நாள் ரூ.5.4 கோடி, ஆறாவது நாள் ரூ.4.4 கோடி வசூல் செய்திருந்தது.
பிருத்விராஜ், ஜிம்மி ஜீன்-லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல், தாலிப் அல் பலுஷி, ரிகாபி நடித்த இப்படம், பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.
90களில் வளைகுடாவுக்கு வேலை தேடி சென்று, ஆடு மேய்க்கும் பணியில் சிக்கித் தவிக்கும் நஜீப் என்ற கேரள இளைஞனின் உண்மைக் கதையை இப்படம் சொல்கிறது.
படத்தின் வசூல் குறித்து பிருத்விராஜ் கூறியதாவது:
“2008ல் பிளெஸ்ஸி இந்த படத்தில் நடிக்க என்னிடம் கேட்டபோது, நான் எப்படி நடிக்க முடியும் என்று சந்தேகம் இருந்தது. நாவல், பிளெஸ்ஸி கற்பனை செய்த நஜீப், என் கற்பனை செய்த நஜீப் என மூன்று பேர் இருந்தனர். இறுதியில், என் கற்பனையில் இருந்த நஜீப்பாக நடிக்க முடிவு செய்தேன்.”
