கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பலரும் ஏசியை பயன்படுத்துகின்றனர். ஆனால், தொடர்ந்து ஏசியை பயன்படுத்துவதில் ஆபத்தும் உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏசி-யின் ஆபத்துகள்:
சுவாசப் பிரச்சினைகள்: ஏசியை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தும்போது, அதில் தங்கியிருக்கும் தூசுக்கள், பாக்டீரியாக்கள் அறை முழுவதும் பரவி மூச்சு திணறல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
ஆக்ஸிஜன் குறைவு: பலரும் இரவில் தூங்கும்போது ஏசியை ஆன் செய்து, அறையை முழுவதுமாக மூடிவிட்டு உறங்குவார்கள். இதனால் அறைக்காற்று வெளியேற முடியாமல் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, சிலருக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்படலாம்.
சளி, இருமல்: வெயிலில் அலைந்து வியர்வையோடு வீட்டிற்கு வந்து உடனே ஏசியை போட்டால், வியர்வையுடன் குளிர்ந்த காற்று சேர்ந்து சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்த சில வழிமுறைகள்:
ஏசியை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்: ஏசியின் ஃபில்டர்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள்.
அறை வெப்பநிலையை சரியாக பராமரிக்கவும்: ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸுக்கு மேல் வைக்க வேண்டாம்.
அறையை காற்றோட்டமாக வைத்திருங்கள்: தினமும் சிறிது நேரம் ஜன்னல்களை திறந்து வைத்து அறையை காற்றோட்டமாக வைத்திருங்கள்.
வியர்வையுடன் ஏசி-யை பயன்படுத்த வேண்டாம்: வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் உடனே ஏசியை பயன்படுத்தாமல், சிறிது நேரம் குளிர்ந்து பின்னர் பயன்படுத்துங்கள்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கவனம்: குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஏசி காற்றில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
