தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. சர்ச்சைகளுக்கும் கிசுகிசுகளுக்கும் மிகவும் பிடித்தமானவர். இதனால் இவரது பெயர் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டே இருக்கும். நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், கெளதம் இயக்கும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் நடித்து வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இந்த விவகாரம் தற்போது நீடித்து வருகிறது. அதாவது, அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிகர் சிம்பு முழுமையாக நடித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதால், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளது.
அந்த வகையில் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் பட விவரகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து, நடிகர் சிம்புவின் தயார் உஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நடிகர் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படங்களைத் தடை செய்ய முயற்சிக்கிறார்கள். சிம்பு – மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது எனவும், திட்டமிட்டபடி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறினார்.