Tuesday, December 5, 2023

முக்கிய கோரிக்கைக்காக முதலமைச்சரை சந்தித்த விஜய்சேதுபதி

சினிமா படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்தார்.

நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல 2 காதல்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை, விஜய்சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில், தற்போது 28ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

kathu vaakula 1

இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜய்சேதுபதி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு நேரடியாக முதலமைச்சரை சந்தித்து திரைத்துறை சார்ந்த கோரிக்கை வைத்ததற்காக பலரும் நன்றி கூறி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles