இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை எமி ஜாக்சன். அந்த படத்திற்கு பிறகு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்தார் அவர்.
பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலனுடன் குழந்தை பெற்று இல்லற வாழ்கையில் பிஸியாக இருந்தார் . ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் காதலனை பிரிந்து தற்போது புது காதலர் உடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏ.எல் விஜய்யின் அடுத்த படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் .
அருண் விஜய் தான் அந்த படத்தில் ஹீரோ என்றும் இந்த புது காம்போ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகரக்ள் மத்தியில் தாறுமாறாக எழுந்திருக்கிறது.