Saturday, December 2, 2023

குஷ்பு வா இது அனைவரும் ஷாக் ஆனா புகைப்படம்!

தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். பாஜகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் அரசியல் சமூக கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் மெலிந்து இருப்பதாக குறிப்பிட்டு சேலையில் மெலிந்த தேகத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.

தற்போது இன்னும் சில உடல் மெலிந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். நடிகை திரிஷாவும் குஷ்புவின் உருமாறிய அழகான தோற்றத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles