அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்…இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது,பல மாதங்களாக ஷூட்டிங் துவங்காமல் இருப்பதால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். ஆனால் விரைவில் துவங்கும் என சொல்லப்படுகிறது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா – ஹுமா குரேஷி, சஞ்சய் தத், ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்…இப்போது கூட இன்னும் நிறைய பேர் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது,அசர்பைஜானில் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின் சென்னையில் 10 நாட்கள் விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி…இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பல பேட்டிகளில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அஜித் சார் தான் முக்கிய காரணம் என கூறி வருகிறார் பல ரசிகர்களும் இவருடன் அஜித் இணைந்து படம் பண்ணுவாரா என பேசப்பட்டு வருகின்றனர்.
இயக்குனர் ஆதிக் சொல்லிய தகவல் மார்க் ஆண்டனி போன்ற படத்தை எடுக்க தன்னை ஊக்குவித்தார் அஜித் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் கதை ஒன்றை கூறியுள்ளாராம்.
கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என அஜித்தும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இணைய அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அப்படி நடந்தால் செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.