தமிழ் சினிமா நடிகர் அஜித்தின் ஆலோசனைப்படி சென்னை எம்ஐடி கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து பறந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்கான இந்த விமானத்தை அஜித் தலைமையிலான மாணவ குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த ட்ரோனை ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த சாதனை குறித்து சென்னை எம்ஐடி கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.சுப்பிரமணியன் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி கல்லூரி மாணவர்கள் இணைந்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யூஏவி சேலஞ்ச் என்ற போட்டியில் பங்கேற்க திட்டமிட்டனர். இந்த போட்டியில் ஆம்புலன்ஸ் போல அவசர நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் பல மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய வாகனத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பதே இந்த போட்டி.இந்த போட்டியில் வெற்றி பெற சிறந்த ஆலோசகரை நியமிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. அப்போது நடிகர் அஜித்தை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அஜித் அவர்கள் ஆர்வமாக ஒப்புக்கொண்டார்.
அஜித் அவர்கள் மாணவர்களை நெருக்கமாக வழிநடத்தினார். மாணவர்கள் மெடிக்கல் உதவி செய்யும் சிறிய ரக விமானத்தை தயாரிக்க முடிவு செய்ததால் அதை சிறப்பாக செய்து முடிக்க அஜித் அவர்கள் பல நுணுக்கமான அறிவுகளை வழங்கினார்.அஜித் அவர்களின் ஆலோசனையின் பேரில் மாணவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் வரை கட்டுப்பாட்டாளரின் தொடர்பிலேயே பறக்கும் மற்றும் 6 மணி நேரம் 7 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் விமானத்தை வடிவமைத்து முடித்துள்ளனர்.
இதுவரை உலகில் இவ்வளவு நீண்ட நேரம் ஒரே பேட்டரியில் இயங்கும் விமானங்கள் இல்லை. இதனால் மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த விமானம் பிற்காலத்தில் ராணுவத்தின் பயன்பாட்டிற்கும் வரலாம் என கூறப்படுகிறது.
தற்போது அந்த குழு இந்த விமானத்தில் எப்படி மருத்துவ உதவி செய்யும் பொருட்களை உட்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியில் இறக்கியுள்ளது. இந்த முயற்சி வெற்றி கரமான நடக்கும் பட்சத்தில் இந்த குழுவின் ஆராய்ச்சி தான் வெற்றி பெறும் என போட்டியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித் மாணவர்களுக்கு அளித்து வரும் ஆலோசனைக்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர் மாணவர்கள்களை சந்திக்கும் ஒவ்வொரு நாளும், ரூ 1000 வித சம்பளமாக தர முன்வந்தது. அதை வாங்க மறுத்த நடிகர் அஜித் அந்த கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்கு அந்த பணத்தை படிப்பிற்கான உதவி தொகையாக வழங்க கோரியுள்ளார்.
இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் இறுதி போட்டி நடக்கிறது. நமது சென்னை மாணவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற்றால் அது நமக்கு மட்டும் அல்லது ஒட்டு மொத்த இந்தியாவிற்குமே பெருமை தேடி தரும் ஒரு விஷயமா அமையும். அந்த வகையில் அவர்கள் வெற்றி பெற கமெண்டில் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்” என்று கூறினார்.சென்னை எம்ஐடி மாணவர்கள் உருவாக்கிய இந்த ஆளில்லா விமானம் உலக சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த மாணவர்கள் இறுதி போட்டியில் வெற்றி
