Tuesday, February 24, 2026

தளபதி விஜய்க்கு போட்டியாக இறங்கி அடிக்க முடிவு செய்த அஜித் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், விஜய், அஜித் இருவரின் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளன.

‘கில்லி’ ரீ ரிலீஸ்:

ADVERTISEMENT

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து 2004ல் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த படம் கில்லி. தற்போது கில்லி வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 20) தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் கில்லி படம் வெளியாகிறது.

இந்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் கில்லி படத்தை மீண்டும் தியேட்டரில் பார்க்க ஆர்வமாய் காத்திருக்கின்றனர்.

‘மங்காத்தா’ ரீ ரிலீஸ்:

அதை தொடர்ந்து, மே 1ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவரது 50வது படமும், இண்டஸ்ட்ரி ஹிட் படமுமான மங்காத்தா ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித் ரசிகர்கள் ஆண்டுதோறும் பட அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் மங்காத்தா ரீ ரிலீஸ் அறிவிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘கில்லி’, ‘மங்காத்தா’ போட்டி:

சமீபமாக அஜித் – விஜய்யின் புதிய படங்கள் வராவிட்டாலும் கில்லி – மங்காத்தா மூலமாக மீண்டும் ரீ ரிலீஸில் ஒரு போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க விஷயம்:

இந்த இரண்டு படங்களிலுமே நாயகி த்ரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு டுபுள் ட்ரீட்:

இந்த இரண்டு ரீ ரிலீஸ் படங்களும் ரசிகர்களுக்கு டுபுள் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT