அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது. திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் பைக் டூர் சென்றுள்ளார்.
இதற்கிடையே, விடாமுயற்சி ஷூட்டிங் முடியாத நிலையில் அஜித்தின் 63வது படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
அதேபோல், குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருப்பதாகவும், டைம் ட்ராவல் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகும் என்றும் தகவல் வெளியானது. தற்போது, ஜெயிலர் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சுனில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் போன்ற தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
