Tuesday, February 24, 2026

லால் சலாம் Audio launch யில் அரங்கை அதிரும் அளவுக்கு தல தல 🔥 தெறிக்க விட்ட அஜித் !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதன் பிறகு இயக்குநராக மீண்டும் களம் இறங்கினார். ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கிய அவர், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் அப்பா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை வைத்து லால் சலாம் என்ற திரைப்படம் இயக்கியுள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா லியோ முத்து உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், படத்தின் நாயகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் மேடை ஏறி பேசும் போது, ஒரு கிரிக்கெட் அணிக்கு கோச் ஆக நீங்கள் எந்த நடிகரை நியமிப்பீர்கள் என்று கேள்வி எழுந்தது.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால், “அஜித் குமார்” என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதும், அரங்கம் முழுவதும் “தல” என்று கோஷம் எழுந்தது. சமீபத்தில், வெள்ள பாதிப்பில் சிக்கிய விஷ்ணு விஷாலுக்கு உதவி செய்த அஜித்தை நினைத்து விஷ்ணு விஷால் இதைச் சொன்னார்.

அதே கேள்வி விக்ராந்திடம் கேட்கப்பட்டபோது, அவர் உடனே “விஜய் தான்” என்று சொன்னார். விஜய் பெயரை விக்ராந்த் சொன்னதும், அரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

விஜய் மற்றும் அஜித் பெயர்களை சொன்ன விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை பார்த்த ரஜினிகாந்த் சிரித்தார். இருவரும் பேசும் போது, “ரஜினி சார் படத்தில் நாங்க இருக்கிறோம் என்பதே எங்களுக்கு கிடைத்த பாக்கியம்” என்று மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT