ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணி கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில், சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜடேஜா, ரசிகர்களிடம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார்.
“தோனி மற்றும் ராயுடு போன்ற வீரர்கள் ‘தல’ மற்றும் ‘சின்ன தல’ என்ற பட்டங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். ஆனால், எனக்கு அப்படி எந்த பட்டமும் இல்லை. அதனால், எனக்கு ஒரு பொருத்தமான பட்டத்தை தேர்ந்தெடுக்க ரசிகர்களின் ஆதரவு தேவை,” என்று ஜடேஜா சிரிப்புடன் கூறினார்.
சேப்பாக்கம் மைதானம் குறித்து ஜடேஜா:
“எப்போதும் சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எதிரணிக்கு இங்கு விளையாட இரண்டு அல்லது மூன்று நாள்கள்தான் இடைவெளி இருக்கும். அந்த குறுகிய காலத்தில் ஆடுகளத்தை புரிந்துகொள்வது கடினம். ஆனால், இது எங்கள் சொந்த மைதானம் என்பதால், இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்,” என்று ஜடேஜா தெரிவித்தார்.
அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் சூழலில் அஜித் இப்போது பைக் டூரில் இருக்கிறார்.
பைக் டூர் அப்டேட்டாக வருகிறதே விடாமுயற்சி அப்டேட் எப்போது வரும் என்று ஏகே ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் நேர்ந்த கார் விபத்து தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்தச் சூழலில் ஆரவ்வுக்கு அஜித் காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அஜித். அவரது பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. அதேசமயம் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. முதலில் ஷூட்டிங் தொடங்கியபோது ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதன் காரணமாக ஷூட்டிங் தடைபட்டது. அதன் பிறகு நீரவ் ஷா படத்திலிருந்து நீக்கப்பட்டு ஓம் பிரகாஷ் ஒளிபதிவாளராக கமிட் செய்யப்பட்டார்
ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்தது: இப்படி சில விஷயங்கள் நடந்த பிறகு விடாமுயற்சி ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர். முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்ததாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தனர். படத்தை விரைவில் முடிக்க மகிழ் திருமேனி மும்முரமாக உழைப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது.
ஷூட்டிங் தாமதம்: முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் முடிந்த பிறகு அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்கு தொடங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அநேகமாக அஜர்பைஜானுக்கே படக்குழு மீண்டும் செல்லலாம் என கூறப்பட்டாலும்; இல்லை முதல் ஷெட்யூலுக்கே போட்ட பட்ஜெட்டைவிட அதிகம் வந்துவிட்டது அதன் காரணமாக இந்தியாவுக்குள்ளேயே ஷூட்டிங் நடத்த லைகா அறிவுறுத்தியதாக ஒரு பேச்சு ஓடியது. இதற்கிடையே அஜித்குமாருக்கு காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் இருந்த வீக்கத்தால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பைக் டூர்: சிறிய அளவிலான அறுவை சிகிச்சையை செய்த பிறகு பூரண குணமடைந்த அவர் பைக் டூர் சென்றிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கிறார்கள். அந்த டூரின்போது அஜித் பிரியாணி செய்தது, பில்லியர்ட்ஸ் விளையாடியது, சக ரைடர்களுக்கு பைக் எப்படி ஓட்ட வேண்டும் என்று க்ளாஸ் எடுத்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகின.
ஆரவ்வுக்கு பரிசு: இந்நிலையில் ஆரவ்வுக்கு அஜித்குமார் காஸ்ட்லி பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது இந்த டூரில் ஆரவ்வுக்கு பைக் மீதும், பைக் ஓட்டுவதன் மீதும் இருக்கும் காதலையும், ஆர்வத்தையும் புரிந்துகொண்ட அஜித் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை வாங்கி கிஃப்ட் செய்திருக்கிறாராம். முன்னதாக விடாமுயற்சி ஷூட்டிங்கின்போது அஜித்துக்கும், ஆரவ்வுக்கும் ஏற்பட்ட கார் விபத்து தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜாவின் 3 விக்கெட் சாதனை:நேற்று நடந்த போட்டியில், ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். 7வது ஓவரில் ரகுவன்ஷி மற்றும் நரைன் ஆகியோரையும், அடுத்த ஓவரில் வெங்கடேஷ் ஐயரையும் அவுட் செய்தார். ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக கொல்கத்தா அணி 137 ரன்களில் ஆட்டமிழந்தது.
Mankatha BGM played by DJ on Yesterday #CSKvsKKR match 💥#VidaaMuyarchi .. #AjithKumar#GoodBadUgly #Ajith #Ajithkumar𓃵 pic.twitter.com/it7eHCBWNY
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) April 9, 2024
