Tuesday, February 24, 2026

போடுறா வெடிய நீண்ட நாள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் படங்கள் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், விஜய்யின் “பையா” மற்றும் “கில்லி” படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட் ஆகின.

இந்த வரிசையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், “மங்காத்தா” படம் மே 1-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன “மங்காத்தா” படம், அவரது சினிமா கேரியரில் முதன் முதலாக அதிக வசூல் கொடுத்த படம் என்ற பெருமைக்குரியது.

இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்பதால், “மங்காத்தா” படத்தின் ரீ-ரிலீஸ் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி, மே 1-ம் தேதி படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால், ரசிகர்கள் தங்களது அன்பிற்குரிய நடிகரின் பிறந்தநாளை படத்தை பார்த்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

“மங்காத்தா” படத்தின் ரீ-ரிலீஸ், அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT