தமிழ் சினிமாவில் ஸ்டைலான ஹீரோவாக, தனித்துவமான க்ரஷ் கொண்ட நடிகராக வலம் வருபவர் அஜித். விமர்சனங்கள் இருந்தாலும், அவரது ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் அஜித், அதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சினிமாவில் பிசியாக இருந்தாலும், தனது பொழுதுபோக்கிற்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்குகிறார் அஜித். யாரையும் பற்றியும் கவலைப்படாமல், மகிழ்ச்சியாக வாழ்கிறார். சமீபத்தில், கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் இணைந்திருந்த அவரது வீடியோ வைரலானது.
அஜித் படங்கள் வெளியாவதை விட, அவரது புகைப்படங்கள் வெளியாவதை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் சுவாரஸ்ய தகவல்:
இப்படத்தில் அஜித்துடன் நடித்த விஜய் தான் முதலில் கால்ஷீட் கொடுத்தார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க சரியான ஹீரோவை தேடிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியனுக்கு அஜித் நண்பராக இருந்திருக்கிறார்.
அமராவதிக்கு முன்பே மணிரத்னம் தயாரிப்பில் அஜித் நடிக்க இருந்தார். அப்படத்தின் உதவி இயக்குனர் ரமணாதான் இயக்க இருந்தார். அந்தப் படத்திற்கான ஸ்டில்ஸ் எடுக்கும்போது கேமராமேன் இறந்துவிட்டார். அதனால் அந்த புகைப்படங்கள் அமராவதி படத்திற்கு பயன்படுத்தப்பட்டன. இல்லையென்றால், அமராவதிக்கு முன்பே மணிரத்னம் அஜித்தை அறிமுகப்படுத்தியிருப்பார்.
இந்த நட்பால்தான் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித் நடிக்க வந்ததாக சௌந்தர பாண்டியன் கூறினார்.
