எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது.. மறைந்த மாபெரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன், மற்றொரு பாதி குடும்பசென்டிமெண்ட் என இரு கோணங்களில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஹாலிவுட் தரத்தில் பைக் ரேஸிங் காட்சிகள் ரசிகர்களை மிரட்டியது. 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறியது.
இந்நிலையில் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 25-ஆம் தேதி ஜி 5 ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக முறையில் வெளியிட்டுள்ளது. ஒரு பெரிய மைதானம் ஒன்றின் நடுவே ஆயிரம் சதுரஅடியில் இதற்கான விளம்பரம் உருவாக்கப்பட்டு வெளியிட்டது.