Tuesday, February 24, 2026

போடுறா வெடிய அஜித்தின் அடுத்த படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கப்போகிறாரா?.. செமயா இருக்குமே

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் தமிழ் நடிகர் அஜித் குமார் அதற்கு நேர்மாறான வழியில் செல்ல தேர்வு செய்கிறார். நடிகர்கள் பேட்டிகள் அளித்து அல்லது வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டு தனது படங்களை விளம்பரப்படுத்துவதில்லை. ஆனாலும், அவரது மார்க்கெட் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போது, ​​அஜித்தின் வரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் செட்டில் இருந்து ஒரு வைரல் ஸ்டண்ட் வீடியோ, படத்திற்கான அனைத்து ஹைப்பையும் உருவாக்க போதுமானதாகத் தெரிகிறது, ஏனெனில் இது நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.லைகா புரொடக்ஷன்ஸ் மூன்று வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் வீடியோக்களை வெளியிட்டது. ஒரு காட்சி ஸ்டண்டின் போது காரின் உட்புறத்தைக் காட்டியது, இரண்டாவது கிளிப் காரின் நீண்ட ஷாட், மற்றும் ட்ரோன் காட்சிகள் முழு காட்சியையும் உள்ளடக்கியது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது.

ADVERTISEMENT

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். இதுவரை மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பு பெறும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

நோ அப்டேட்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. வலிமை படத்தின் அப்டேட்டுக்கு எப்படி ஏகே ரசிகர்கள் காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. மாறாக அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்: அங்கு தொடங்கிய ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது பைக் டூர் கிளம்பியிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர்.

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இத்தனை கெட்டப்பா: சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருட பொங்கலுக்கு படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் தபு நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடியது. அடுத்ததாக அனிமல், கங்குவா பட வில்லன் பாபி தியோலை நடிக்க வைக்க ஆதிக் யோசித்ததாகவும்; ஆனால் அதற்கு அஜித்தோ அவர் வேண்டாம். அவர் அதிகம் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். எனவே ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும் என்று கூற; இப்போது ஜான் ஆபிரஹாமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சுதா கொங்கரா: அதன்படி அந்தப் படத்தை சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுதா சொன்ன கதை அஜித்துக்கு டபுள் ஓகே ஆகியிருப்பதால் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டாராம்அஜித் . இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சுதா இயக்கினால் அஜித்தின் பட்டாசாக இருக்கும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்துக்காக தேசிய விருது வென்றார். இப்போது அவர் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி கடந்த பல மாதங்களாக அஜர்பைஜான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உருவாகி வருகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையில், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் படத்தை போதுமான அளவு விளம்பரப்படுத்தவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பல புகார்கள் வந்தன. புதிய ஸ்டண்ட் வீடியோ தற்போது இதுபோன்ற புகார்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT