Tuesday, February 24, 2026

தமிழ் சினிமாவின் தங்க ஜோடி அஜித் – ஷாலினி தம்பதியினர் இன்று 24வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி தம்பதியினர் இன்று தங்கள் 24வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சினிமாவில் அஜித்-ஷாலினி

ADVERTISEMENT

1979ல் பிறந்த ஷாலினி, தனது 4வது வயதிலேயே சினிமாவில் அறிமுகமானார். “பேபி ஷாலினி” என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்றார். சிவாஜி, ரஜினிகாந்த், அர்ஜூன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 1997ல், இயக்குநர் பாசில் “காதலுக்கு மரியாதை” படத்தில் ஷாலினியை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். ஷாலினி “கண்ணுக்குள் நிலவு”, “அமர்க்களம்”, “அலைபாயுதே”, “பிரியாத வரம் வேண்டும்” போன்ற 5 படங்களில் மட்டுமே நடித்தார்.

1992ல் “அமராவதி” படத்தில் அஜித் முதன்முதலில் நாயகனாக நடித்தார். 1999ல் முன்னணி நடிகராக உருவெடுத்த அவர், ஷாலினியுடன் “அமர்க்களம்” படத்தில் நடித்தார்.

காதல் வரவைத்த பாடல்

“அமர்க்களம்” படத்தில் “சொந்த குரலில் பாட” என்ற பாடலை ஷாலினி பாடியிருந்தார். இந்த பாடல் அஜித்துக்கு மிகவும் பிடித்து போனது, அதுவே அவர்களின் காதலுக்கு வித்திட்டது. இயக்குநர் சரண் அஜித்தின் காதலை புரிந்து, அந்த பாடலை கேசட்டில் 10 முறை பதிவு செய்து கொடுத்தார். ஷாலினியும் அஜித்தின் காதலை ஏற்றுக்கொண்டார்.

2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, இரு வீட்டார் சம்மதத்துடன் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பிறகு தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். ஷாலினி முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் ஷாலினி, கணவர் மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் நேரங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இன்று 24வது திருமண நாளை கொண்டாடும் அஜித் – ஷாலினி தம்பதியினர் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடிகளில் ஒன்றாக என்றென்றும் நினைவில் கொள்ளப்படுவார்கள் என்பது திண்ணம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT