Tuesday, February 24, 2026

லைக்காவிற்கு அஜித் வச்ச கடைசிக்கெடு! பதறிப்போன லைகா! சத்தமே இல்லாமல் காயை நகர்த்தும் அஜித் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் நடிக்கும் படங்கள் என்றாலே படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பஞ்சாயத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. திட்டமிட்டபடி படங்கள் முடியாததும், படக்குழு சந்திக்கும் சிக்கல்களும் அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தின் அப்டேட்டை 2 வருடங்களாக விடாமல் இருந்தது படக்குழு. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். படம் வெளியான பின் ரசிகர்களை கவரவில்லை. அதே இயக்குனரின் துணிவு படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

ADVERTISEMENT

துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்துதான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த அஜித், அந்த படத்திலிருந்து விலகினார்.

அசர்பைசான் நாட்டில் துவங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்கள் நடந்தது. பனி மழை, புயல் காற்று, லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி என பல காரணங்களால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும் அஜித் பைக்கில் புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருந்த அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த பிறகே அந்த படத்தில் நடிப்பேன் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இதனால் கடுப்பான தயாரிப்பு நிறுவனம், இந்த மாதம் 10ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் வேலையில் இறங்கியுள்ளது.

விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும்?

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அஜித் ரசிகர்கள்:

அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படம் விரைவில் திரைக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT