மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு இன்று செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி, பிரபு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அப்போது அஜித் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அவர், அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாயில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
முன்னதாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாத கார்த்தி, சூர்யா, சிவகுமார், சசிகுமார், ஜெயம் ரவி ஆகியோர் கேப்டனின் நினைவிடம் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அஜித் விஜயகாந்த் நினைவிடம் செல்லவில்லை என்றால் அது இன்னும் பெரிய சர்ச்சையாகும் என்பதால், ரசிகர்கள் அவரது வருகையை எதிர்பார்த்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அஜித் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
