பிரபல நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக துபாயில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.
அங்கு சில ரிஸ்க்கான கார் சேஸிங் சண்டைக் காட்சிகளை படக்குழு படமாக்கி வந்தது. அப்போது எதிர்பாரா விதமாக அஜித் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அஜித் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.
வீடியோ வெளியீடு:
இந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய யூடியூபில் வெளியிட்டுள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆரவ் பதிவு:
Finally now that it’s out. Narrow escape for both of us. Forever grateful to god.
🙏 https://t.co/RV3psdKyEa— Aarav Kizar (@Aravoffl) April 4, 2024
இந்த காட்சியில் அஜித் ஓட்டிச் சென்ற காரில் நடிகர் ஆரவ்வும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த எதிர்பாரா விபத்து குறித்து தன்னுடைய யூடியூபில் பதிவிட்ட ஆரவ், “இந்த விபத்தில் இருந்து இருவருமே மயிரிலையில் உயிர் பிழைத்தோம். இதற்காக இறைவனுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.
படப்பிடிப்பு நிலை:
லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஒரு கட்டத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ வைரல் 1 மில்லியன் வியூஸ் தாண்டி போகியுள்ளது இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது
