அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, இன்னும் இரண்டு அட்டவணைகள் மீதமுள்ளன. மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வட இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், புனேவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து படத்தை மே மாதம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடந்தது.
ஒட்டுமொத்த சூட்டிங்கையும் அசர்பைஜானிலேயே நிறைவு செய்ய இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு பெய்துவரும் பனிமழை காரணமாக படத்தின் அசர்பைஜான் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அஜித் துபாய் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் ஜார்ஜியாவில் துவங்கவுள்ளதாகவும் இதைதொடர்ந்து சென்னை மற்றும் ஐதராபாத்திலும் சூட்டிங் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லைகா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்டு கடந்த இரு மாதங்ளாக சூட்டிங் தொடர்ந்தது. அஜித் -அர்ஜூன் இடையிலான ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் என அடுத்தடுத்து அதிரடி காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட்டன. இதனிடையே அங்கு சூட்டிங்கை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பனிமழை பொழிந்துவரும் சூழலில் படத்தின் சூட்டிங்கை அங்கு நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் பேக்கப் செய்துள்ளனர். நடிகர் அஜித் துபாய் சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் ஜியார்ஜியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜியார்ஜியாவில் நடக்கும் சூட்டிங்: ஜார்ஜியாவின் டிபிலிசி பகுதியில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் ஐதராபாத்திலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு இந்த மாதத்திற்குள் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போகும் நிலையில் ஜியார்ஜியாவில் திட்டமிடப்படும் சூட்டிங்கை தொடர்ந்து நடத்தி முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்தில் அஜித் இணையவுள்ளார்.
வெளிநாட்டில் நடக்கும் ஏகே63 பட சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் இணையும் நடிகர், நடிகைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே விடாமுயற்சி படத்தை போலவே ஏகே63 படத்தின் சூட்டிங்கும் முற்றிலும் வெளிநாடுகளிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. பாங்காக் மற்றும் லண்டனில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களை சேர்ப்பதைவிட படத்தின் ஸ்கிரிப்ட்டில் அதிக கவனம் செலுத்துமாறு ஆதிக்கிற்கு அஜித் அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.சிவா இயக்கத்தில் இணையும் அஜித்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கை சிவா நிறைவு செய்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கமிட்மெண்டை நிறைவு செய்துவிட்டு சிவா அஜித்தின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக அஜித்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவரும் விடுதலை 2, வாடிவாசல் என அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் பிசியாக உள்ளார். இதனால் தற்போது சிவா, அஜித்தை இயக்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.
