பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜா வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி ஆகியோர் ராஜா வேடத்தில் நடித்தனர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சூர்யா கங்குவா படத்தில் போர் வீரனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் ராஜ ராஜ சோழனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டுக்கு செல்வதற்கு முன்னதாகவே இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் எழுத்தாளர் பாலகுமரனோடு சேர்ந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் எப்படி கட்டினார் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகும் என தெரிகிறது. இந்த படம் ஒரு பெரிய வரலாற்று படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படம் முடிந்ததும் நாமும் பிரம்மாண்டமான படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அஜித்துக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், வரலாற்று படங்கள் பெரியளவில் வசூல் வேட்டை நடத்தி வருவதால், கூடிய சீக்கிரமே விஷ்ணுவர்தன் உடன் இணைந்து ராஜ ராஜ சோழனாக அஜித் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்கள் உண்மையானால், அஜித் ராஜ ராஜ சோழனாக நடித்தால், அது தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று படமாக அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
