Tuesday, December 5, 2023

பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் First Look வெளியாகி வைரலாகி வருகிறது!

கடந்த ஆண்டு சூர்யாவை வைத்து இயக்குநர் பாலா தொடங்கிய படம் ‘வணங்கான்’. ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

bala vanangaan

அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

vangaan 2

கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிகளல் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று (செப்.25) வெளியிட்டுள்ளது.

இதில் உடல் முழுவதும் சகதியுடன் அருண் விஜய் வலது கையில் பெரியார் சிலையையும், இடது கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles