பெங்களூரு தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ள நிலையில், சென்னைக்கும் இதே சிக்கல் வர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 5 நகரங்களில் தண்ணீர் பஞ்சம்:
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் மும்பை ஆகிய 5 நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்று ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
டெல்லியில் காற்று மாசுடன் தண்ணீர் பஞ்சமும்:
டெல்லி மக்கள் ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கோடைகாலத்தில் டெல்லியின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் அபாயம் உள்ளது.
மும்பையில் தண்ணீர் தட்டுப்பாடு:
மும்பையில் நீர் ஆதாரங்கள் குறைந்து வருவது மற்றும் சீரற்ற மழை போன்ற காரணிகளால் இந்த கோடையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் தவறுகள்:
சென்னையில் அதிகளவில் மழை இருந்தாலும், திறமையற்ற நீர் மேலாண்மை, தண்ணீரை சேமித்து வைக்க தெரியாத நிர்வாகம், பயன்பாடு மற்றும் தண்ணீர் சிக்கனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் சென்னையும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது.
பெருகும் மக்கள்தொகை – தண்ணீர் தட்டுப்பாடு:
ஏற்கனவே போதிய மழை இல்லாமல் தவிக்கும் ராஜஸ்தான் தலைநகரான ஜெய்பூர் மற்றும் பெருகும் மக்கள்தொகை காரணமாக போதுமான மழை இல்லாததால் கடும் தண்ணீர் பஞ்சம் உருவாகும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
