கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்…இதன் 7வது சீசன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது இப்போதே நிறைய Contestant details வந்து கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் ரூ.130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது…அதனை போல இன்னும் நிறைய தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.
மேலும் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள் இருக்க போகிறது. ஏனென்றால் இந்த முறை ஒரு வீடு அல்ல இரண்டு வீடு என ப்ரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கூறியிருக்கிறார் அடுத்த வாரம் முதல் TRP தெறிக்கும் என சொல்லப்படுகிறது..அதனால் என்னலாம் நடக்கும் என ரசிகர்கள் பார்க்க காத்துள்ளனர் என்றே சொல்லலாம்.
இதனால் கண்டிப்பாக பல விதிமுறைகள் புதிதாக இருக்கும்…இதை எப்படி போட்டியாளர்கள் கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார்யார் என சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது அது வைரலாக பேசப்பட்டும் வருகிறது.
ரவீனா,ஜோவிகா,தர்ஷா குப்தா,விஷ்ணு,குமரன்,சத்யா,இந்தரஜா,அனாயா,பப்லு பிரித்விராஜ்,மூன்நிலா இவர்கள் வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.