Tuesday, February 24, 2026

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். இந்த சீசன் பல எதிர்பாராத திருப்புமுனைகளுக்கும், சர்ச்சை மற்றும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றது.

போட்டியாளர்கள் மத்தியில் யார் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது பெண் போட்டியாளர் ஒருவர் 16 லட்சம் ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை பூர்ணிமா ரவி தான்.

ADVERTISEMENT

பணப்பெட்டியை எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்த பூர்ணிமா கடைசியாக பணப்பெட்டியை எடுத்து சென்றுள்ளார். டாப் 2 ரேங்கில் பூர்ணிமா வரக்கூடும் என்று எண்ணிய நிலையில் அவரின் இந்த முடிவு பிக்பாஸ் ரசிகர்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஒரு பக்கம் ஷாக்காக இருந்தாலும் ரூ.16 லட்சத்துடன் சென்றிருப்பது ஒரு சாதுரியமான முடிவுதான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், பூர்ணிமா ரவி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், அவர் தனது முடிவை சரியாக எடுத்துக்கொண்டார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்போது மாயா, அர்ச்சனா, விசித்திரா, தினேஷ், விஷ்ணு, மணி மற்றும் விஜய் வர்மா ஆகியோர் மட்டுமே உள்ளனர். யார் இந்த சீசன் வின்னர் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT