Tuesday, February 24, 2026

அடப்பாவமே பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமான விக்ரமன் இப்படி ஒரு நிலைமையா? வெளியில் முகத்தைக் கூட காட்டமுடியாத நிலை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 13 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணைக்காக விக்ரமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார்.

விசாரணைக்கு ஆஜரான விக்ரமன், 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகளில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் ஆஜராக தயார் என்றும் அவர் தெரிவித்ததாக தெரிகிறது.

ADVERTISEMENT

விசாரணை முடிந்து வெளியே வந்த விக்ரமன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், முகத்தை கையில் வைத்திருந்த கோப்புகளால் மூடிக்கொண்டு காரில் ஏறி சென்றார்.

விக்ரமன் மீதான வழக்குகள் தொடர்பாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர், விக்ரமன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் நிச்சயம் நிரபராதி என்று நம்புவதாகவும் கூறுகின்றனர். சிலர், விசாரணைக்கு பின்பு உண்மை வெளிவரும் என்று கூறுகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை இன்னும் தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT