அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனையடுத்து பெரிய படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
‘வலிமை’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே
வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய வீடியோவை போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Witness the Power of #AjithKumar in Cinemas all across the world #Valimai#ValimaiFromFeb24
#HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 pic.twitter.com/RIS8YVOcIC
— Boney Kapoor (@BoneyKapoor) February 16, 2022