2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. முதல் நாளில் இருந்து தனுஷின் கேப்டன் மில்லர் முன்னிலையில் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் மட்டுமே தகவல் தெரிவித்து வந்தனர். ஆனால், தனுஷுக்கு மாலை போட்டு முதல் நாளே வெற்றியை கொண்டாடிய கேப்டன் மில்லர் படத்தின் தயாரிப்பாளர் இதுவரை அதிகாரப்பூர்வமாக படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அயலான் படம் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கே சவால் விடும் என அளந்து விட்ட அயலான் படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் இந்த பொங்கல் வின்னர் அயலான் தான் என அதிரடியாக வசூல் அறிவிப்பை வெளியிட்டு தனுஷ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டார்.
அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகை வரைக்குமே 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படமும் 50 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனம் அமைதி காத்து வருகிறது.
மாட்டுப் பொங்கலான நேற்றும் மக்கள் கூட்டம் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தைத் தான் குழந்தைகளுடன் பார்த்து இங்க பொங்கலை அயலான் பொங்கலாக கொண்டாடியுள்ளது. இதுவரை 60 கோடி ரூபாய் வசூலை அயலான் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் 50 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் ரேஸில் தனுஷை சிவகார்த்திகேயன் பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்றே தெரிகிறது. சத்ய ஜோதி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் தெரியும்.
அயலான் வெற்றிக்கு காரணங்கள்
அயலான் படம் வெற்றி பெற்றதற்கு பின் பல காரணங்கள் உள்ளன.
சிவகார்த்திகேயனின் பிரபலம்: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அயலான் படத்தை வெற்றிபெறச் செய்தனர்.
படத்தின் திரைக்கதை: அயலான் படத்தின் திரைக்கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. படத்தில் சில சாகச காட்சிகளும் உள்ளன.
விஎஃப்எக்ஸ்: அயலான் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விஎஃப்எக்ஸ் மிக சிறப்பாக உள்ளது. இது படத்திற்கு மேலும் ஒரு சிறப்பை சேர்த்துள்ளது.
கேப்டன் மில்லர் வெற்றிக்கும் வாய்ப்புகள் உள்ளன
கேப்டன் மில்லர் படமும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன. படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையும் நன்றாக உள்ளது.
ஆனால், அயலான் படத்தின் வெற்றிக்கு பின்னர் கேப்டன் மில்லர் படம் வெற்றிபெறுவது சற்று கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
