Tuesday, February 24, 2026

அடப்பாவமே தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு வந்த புதிய சோதனை ! உச்ச கட்ட கவலையில் தனுஷ்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் பொங்கல் பாண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இரண்டு நாளில் 7 முதல் 9 கோடியும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 7 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்தது.

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகை தினமான நேற்று 6.50 கோடி ரூபாய் வசூலித்து பெருத்த சரிவை சந்தித்தது. இதன் படி நான்கு நாட்கள் மொத்த வசூல் 30.45 கோடி ரூபாயாக உள்ளது.

நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் படம் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் வசூல் படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் படத்திற்கு குவிந்து வரும் எதிர்மறையான விமர்சனம் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் திரைக்கதை, திரைக்கலை, நடிப்பு, இசை ஆகியவற்றுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், தனுஷின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேப்டன் மில்லர் படம் தனுஷின் மிகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படம் எதிர்மறையான விமர்சனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT