Saturday, December 2, 2023

450 ஷாட்களை காணவில்லை..! ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிர்ச்சி தகவல் பகிர்ந்த இயக்குனர் பி வாசு!

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் ராஜாவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார். இந்த படத்தில் லாரன்ஸ் கமிட் ஆன போதே ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் ஓராண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது.

 

chandramukhi 2 3

படத்தில் CGI எஃபெக்ட்ஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் சிஜி எஃபெக்ட்ஸ் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 28ந் தேதி படம் வெளியாக உள்ளது. இதையடுத்து, சந்திரமுகி 2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு வெளியிட்டது.

அதில்,17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ.. என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. பேய் பங்களா செட் அப் தொடர்ந்து வரும் வடிவேலுவின் சிரிக்க வைக்காத காமெடி, வேட்டையன்’ இன்ட்ரோ, சண்டைக் காட்சி, திகிலுக்கான முயற்சி என பார்த்துப் பழகிய காட்சிகள் தான் இடம்பெற்று இருந்தன.

chandramukhi 2 2

இந்நிலையில், சந்திமுகி2 படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர்15ல் இருந்து 28ம் தேதிக்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து பி.வாசு வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் படத்தின் ஃபைனல் காப்பியை பார்த்தேன், அப்போது, அதில் இருந்த 480 ஷாட்கள் காணவில்லை, கிட்டத்தட்ட 5 நாட்கள் தீவிரமாக தேடி பின் அந்த காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான், சந்திரமுகி 2 படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாததற்கு காரணம் என இயக்குநர் பி வாசு விளக்கம் கொடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles