விக்ரம் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன.குறிப்பாக அவர் கோப்ரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். அதில் அவர் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதிலும் விக்ரமின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது. மன்னர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் அப்படியே பொறுந்திப்போயிவிட்டார்; அதேபோல் ஐஸ்வர்யா ராயிடுனான காதல் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று வழக்கம்போல் அவருக்கு பாராட்டு கிடைத்தது. இருந்தாலும் பொன்னியின் செல்வன் மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்தப் படத்தின் வெற்றியின் முழு பங்கும் விக்ரமுக்கு சென்று சேரவில்லை. இப்படி வெற்றிக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இரஞ்சித் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் கண்டிப்பாக விக்ரமுக்கான வெற்றி இந்தப் படத்தில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போயினர். கோலார் தங்க வயலில் தமிழர்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க திடீரென நேற்று விக்ரம் நடித்த கர்ணா படத்தின் டீசர் வெளியானது. விமல் என்பவர் இயக்கும் அந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார்.
CINEMA NEWS“சீயான் விக்ரம் நடிக்கும் சூர்யபுத்திரன் கர்ணன்! ஆனால் விக்ரமுக்கே தெரியாமல் வெளியான Teaser..!”
BykarthiPublished on September 25, 2023SHARETWEET
விக்ரம் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன.குறிப்பாக அவர் கோப்ரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். அதில் அவர் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதிலும் விக்ரமின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது. மன்னர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் அப்படியே பொறுந்திப்போயிவிட்டார்; அதேபோல் ஐஸ்வர்யா ராயிடுனான காதல் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று வழக்கம்போல் அவருக்கு பாராட்டு கிடைத்தது. இருந்தாலும் பொன்னியின் செல்வன் மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்தப் படத்தின் வெற்றியின் முழு பங்கும் விக்ரமுக்கு சென்று சேரவில்லை. இப்படி வெற்றிக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இரஞ்சித் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் கண்டிப்பாக விக்ரமுக்கான வெற்றி இந்தப் படத்தில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போயினர். கோலார் தங்க வயலில் தமிழர்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க திடீரென நேற்று விக்ரம் நடித்த கர்ணா படத்தின் டீசர் வெளியானது. விமல் என்பவர் இயக்கும் அந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானதாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் படம் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் நின்றுவிட்டது. அதுகுறித்த எந்த தகவலும் அடுத்ததாக வெளியாகவில்லை. இந்நிலையில் திடீரென டீசர் வெளியானதால் இப்படி ஒரு டீசர் வெளியானது விக்ரமுக்கு தெரியுமா?; படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறதா என பல கேள்விகளை ரசிகர்கள் குழப்பத்துடன் கேட்டுவருகின்றனர்.