தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.விக்ரம் பல கெட்டப்புகளை ஏற்று நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கதை
ஒரிசா, ஸ்காட்லாந்து நகரங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அரசியல் தலைவர்களை தனது கணித மூளையால் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறார் விக்ரம். அவரை கண்டுபிடிக்க துப்புதுலக்கும் இன்டர்போல் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் இர்பான் பதான். இந்த இரண்டு கொலைகளும் நடந்து கொண்டிருக்கும் போதே, ரஷ்ய அமைச்சரை கொலை செய்யும் படலத்தில் இறங்குகிறார் விக்ரம்.
இது ஒரு பக்கம் போய் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விக்ரமை கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி காதலித்து வருகிறார். இறுதியில் இந்தக்காதல் என்ன ஆனது? விக்ரம் அரங்கேற்றிய கொலைகளுக்கான காரணம் என்ன? போன்றவற்றிற்கான விடைகளே கோப்ரா படத்தின் கதை.
பிளஸ் அண்ட் மைனஸ்
முதல்பாதியே ஆடியன்ஸூக்கு ஒரு முழு படம் பார்த்த ஃபீலை கொடுத்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு படம் நீளம். சரி, இராண்டாம் பாதியில் இருந்தாவது படம் நன்றாக இருக்கும் எதிர்பார்த்து உட்கார்ந்தால், ஃப்ளேஷ் பேக் என்ற பெயரில், திரைக்கதையை அங்கும், இங்கும் இழுத்து தயவுசெய்து முடியுங்கள் என்று சொல்ல வைத்து விட்டார்கள். hallucinations என்ற பெயரில் விக்ரமை வைத்து விளையாண்டிருப்பது ஏற்கனவே இருந்த எரிச்சலை மேலும் அதிகப்படுத்தி விட்டது. படத்தை கொஞ்சம் ரசிக்க வைப்பது படத்தில் இடம் பெறும் லொக்கேஷன்களும், புவன் ஸ்ரீவாசனின் ஒளிப்பதிவுதான். பாடல்கள் ரசிக்கவைத்தாலும், பின்ன்ணி இசையில் வழக்கம் போல ஆடியன்ஸை முட்டாள் ஆக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மொத்தத்தில் கோப்ரா விநாயகசதுர்த்திக்கு தேவையில்லாத ஆணி.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மகான்’ ஓடிடியில் ரிலீசானது. மகன் துருவ்வுடன் விக்ரம் இணைந்து நடித்த முதல் படமே திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.