Saturday, December 2, 2023

நடிகை கரீனா கபூா் மகன் தொடா்பான கேள்வியால் எதிர்ப்பு பள்ளியில் சர்ச்சை

பள்ளியில் 6ஆம் வகுப்புத் தோ்வில் இந்தி நடிகை கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 6ஆம் வகுப்புப் பொது அறிவுத் தோ்வு நடைபெற்றது. அந்த தேர்வின் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த கேள்வி ஒன்று ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நடிகை கரீனா கபூா் மகனின் முழுப் பெயரை எழுதக் கூறி கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது.

வளர்ந்து வரும் மாணவர்களுக்கு இதெல்லாம் ஒரு அறிவுத் தேர்வு தொடர்பான கேள்வியான என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர். பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், தனியாா் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதுகுறித்து விளக்கமளிக்குமாறு அந்தப் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். பள்ளி நிா்வாகத்திடமிருந்து பதில் கிடைத்த பின்னா், உயா் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

அதேநேரத்தில் விளக்கம் அளித்துள்ளள தனியாா் பள்ளி நிர்வாகம், டெல்லியைச் சோ்ந்த அமைப்புடன் இணைந்து இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புதான் வினாத்தாளை வடிவமைத்தது. தோ்வில் கரீனா கபூரின் மகன் குறித்த கேள்விக்கு மாணவா்களின் பெற்றோா்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை. மாணவா்களின் அறிவை மேம்படுத்தும் முயற்சியாகத்தான் இதைக் கருத வேண்டும். அதேவேளையில், இந்தக் கேள்வி விவகாரம் ஜாதி அல்லது மதத்துடன் இணைத்துப் பேசப்படுவது தவறு, என்று தெரிவித்தாா்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles