Tuesday, February 24, 2026

டாடா கவின் நடித்த ஸ்டார் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகராக மாறியுள்ளார். தற்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், “ஸ்டார்” என்ற படத்தில் கவின் நடிக்கிறார். இப்படத்தை இளன் இயக்குகிறார். “நித்தம் ஒரு வானம்” படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நீண்ட நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. “விண்டேஜ் லவ்” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது, “ஸ்டார்” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் 10 அல்லது 17 ஆகிய தேதிகளில் ஒன்றில் படம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த “இந்தியன் 2” மற்றும் “ராயன்” ஆகிய படங்கள் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதால், “ஸ்டார்” படம் மே மாதத்தில் திட்டமிட்டபடி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT