48 வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி திரைப்படம்:
கௌதம் கார்த்திக் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் டேனியல் கருப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் அவர் நடித்து வெளியான கடைசி திரைப்படம்.
தமிழ் மட்டுமல்லாமல்…:
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாக்களிலும் டேனியல் பாலாஜிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
விஜய்யுடனான நட்பு:
டேனியல் பாலாஜி மற்றும் நடிகர் விஜய் இருவருக்கும் இடையே இருந்த அழகான நட்பு பலரையும் கவர்ந்தது.
பைரவா படத்தில் மொட்டை:
விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்தில் டேனியல் கோட்டை வீரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய்யின் அன்பான நண்பர்:
பிகில் படத்தில் டேனியல் பாலாஜிக்கு வாய்ப்பு கொடுத்த விஜய், பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் டேனியல் பற்றி பேசியபோது, “டேனியல் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாமல், நல்ல மனிதர் மற்றும் கடவுள் பக்தி நிறைந்தவர். அவர் பல அம்மன் கோவில்களை கட்டியுள்ளார்” என்று பாராட்டியிருந்தார்.
நெகிழ்ந்த டேனியல்:
அதே விழாவில் டேனியல் பாலாஜி பேசியபோது, “பைரவா படத்தில் விஜய் என்னை பார்த்து ‘வாங்க அண்ணா’ என்று கூப்பிடுவார். ஆனால் பிகில் படத்தில் ‘வாங்க நண்பா’ என்று அழைத்தார். அவர் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று மனம் நெகிழ்ந்து பேசியிருந்தார்.
மறக்க முடியாத நட்பு:
டேனியல் பாலாஜி மற்றும் விஜய் இருவருக்கும் இடையே இருந்த அன்பான நட்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
