Tuesday, February 24, 2026

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...

டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்: பழிவாங்கும் ஆட்டம் இன்று!

டெல்லி: ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத்...
ADVERTISEMENT

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ரிஷப் பண்ட், 84 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

ADVERTISEMENT

விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிஷப் பண்ட் கூறியதாவது:

“டி20 என்பது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. 14 – 15 ஓவர்கள் முடிந்ததும் பந்து நன்றாக வந்தது. எனவே ரசீக் மீது நம்பிக்கையை வைத்தோம். ஒரு போட்டியில் நன்றாக பந்து வீசும் ஒருவரை நாங்கள் எப்போதும் நம்புவோம். அதனாலேயே அவரை 19வது ஓவரில் பயன்படுத்தினேன். இது போன்ற விஷயங்கள் கேப்டனாக உங்களுடைய உள்ளுணர்வில் தோன்றும். அது இன்று வேலை செய்ததில் மகிழ்ச்சி.”
“தொடர்ந்து விளையாடி அவர்களுடைய முதன்மை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய திட்டம். ஒவ்வொரு நாளும் களத்தில் நான் நன்றாக உணர்கிறேன். மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியமானது. நான் களத்தில் இருப்பதை விரும்புகிறேன்.”
“சில நேரங்களில் பவுண்டரி சிக்சர் வருவதற்கு நேரம் எடுக்கும். இன்று என்னுடைய முதல் சிக்சர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. களத்தில் 100 சதவிகிதம் கொடுக்கவும் விரும்புகிறேன். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.”
இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT