Tuesday, February 24, 2026

பெரிய இடத்து பொண்ணு கேட்குதோ உனக்கு !தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை ! பிரபலம் கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் திருமணம் செய்தபோது பலர் கேள்வி எழுப்பினர். தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோது, ரஜினிகாந்த் ஏன் தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார் என்ற சர்ச்சைகள் எழுந்தன.

18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, 2022ல் தங்கள் பிரிவை அறிவித்தனர். ஆனால் சட்டப்பூர்வ பிரிவு எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில், தற்போது தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கும்படி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து தனது புதிய வீடியோவில் பேசியுள்ள செய்யாறு பாலு, தனுஷ் திருமணத்தை பற்றிய சர்ச்சைகளை நினைவுகூர்ந்துள்ளார். கஸ்தூரி ராஜா குடும்பம் சாதாரணமான குடும்பம் என்றும், தனுஷ் கஷ்டப்பட்டு அந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தனுஷ் திருமணத்தின் போது, தனுஷ் குடும்பம் போயஸ் கார்டனில் பெண்ணெடுத்த அளவுக்கு வசதி இல்லை என்று ஏளணம் செய்ததையும் செய்யாறு பாலு சுட்டிக்காட்டியுள்ளார்.

தனுஷ் அந்த ஏளனங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டி, தன் தந்தை மற்றும் தாயாரை அங்கே குடியிருத்தியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பல கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், செய்யாறு பாலுவின் இந்த கருத்துக்கள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT