சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் 2004 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், பதினெட்டு வருட திருமணத்திற்குப் பிறகு அவர்கள் பிரிந்து செல்வதாக முடிவு செய்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தனர்.
இரு தரப்பு குடும்பங்களும் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்ததாகவும், மேலும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது. இருவரும் தங்கள் வேலைகளுக்காக ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த போதிலும், இருவரும் ஒருவரையொருவர் பேச முயற்சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுவரை ஐஸ்வர்யா சமூக ஊடகங்களில் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்று தனது பெயரை நீக்காமல் இருந்து வந்தார், ஆனால் தற்பொழுது அதை மாற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று ட்விட்டரில் மாற்றினார். தனுஷுடன் மீண்டும் இணையும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை வலுவாக உணர்த்தவே இது என நெட்டிசன்கள் கருதுகின்றனர். இருப்பினும் திறமையான திரைப்பட இயக்குனர் இன்ஸ்டாகிராமில் தனது திருமணமான பெயரைப் பயன்படுத்துகிறார்.
மார்ச் 17 ஆம் தேதி வெளியான ‘முசாஃபிர்’ இசை வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஐஸ்வர்யா விரைவில் ‘ஓ சதி சல்’ இந்தி படத்தை இயக்குகிறார். அவர் பின்னர் தமிழில் ராகவா லாரன்ஸின் காமெடி ஆக்ஷன் த்ரில்லரான ‘துர்கா’வை இயக்கவுள்ளார்.