Tuesday, February 24, 2026

தனுஷுடன் ஹெச் வினோத்தின் அடுத்த படம் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் அஜித்தின் மூன்று படங்களைத் தொடர்ந்து மாஸ் காட்டிய இயக்குநர் ஹெச் வினோத், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் KH233 படத்தை இயக்கவிருந்தார். ஆனால் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் காரணமாக அந்தப் படத்தின் சூட்டிங் தாமதமானது. இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னத்தின் தக் லைப் படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் KH233 படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அடுத்ததாக தனுஷுடன் ஹெச் வினோத் கூட்டணி அமைக்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சேகர் கம்முலாவுடன் டி51 படத்தில் நடித்துவரும் தனுஷ், இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்தப் படத்தை லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து கமலின் KH233 படத்தையும் ஹெச் வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தனுஷ் படத்தை இயக்கி முடித்துவிட்டு தொடர்ந்து கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று 2 படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT